சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற மார்க் ஆண்டனி இயக்குனர்
சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற 'மார்க் ஆண்டனி' இயக்குனர்

தினத்தந்தி
|
1 Oct 2023 3:51 PM IST

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் செல்வராகவன், சுனில், ரித்து வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், ரஜினிகாந்த் தனக்கு ஊக்கமளித்து பாராட்டு தெரிவித்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Blessed to have met @rajinikanth sir today and received many good words of encouragement & appreciation ❤️ #MarkAntony @VishalKOfficial anna @iam_SJSuryah sir @vinod_offl sir @gvprakash sir @aditi1231 ❤️ pic.twitter.com/cFAbtCCBHr

— Adhik Ravichandran (@Adhikravi) September 30, 2023 ">Also Read:
மேலும் செய்திகள்